பக்கம் எண் :

18வடமொழி வரலாறு

     தோர்-தோரணை = கோர்வை, கோர்வையாகச் சொல்லும் முறை.

தோள்-தோஸ் (d)

     தொள்-தொண்-தொண்ணை = பருமன்.

     தொள்-தோள்-தோடு = திரட்சி, தொகுதி.

     தொள்-தொழு-தொழுதி = தொகுதி.

     தோள் = கையின் திரண்ட மேற்பகுதி (புயம்).

"சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி"
(பெரும்பாண். 145)

     ம., க. தோள், து. தோளு.

     தோட்கடகம், தோள்வலி, தோள்வளை, தோளணி முதலிய சொற்களை நோக்குக.

     பிற்காலப் புலவர் இச் சொல்லைக் கை என்னும் பொதுப்
பொருளிலும் ஆண்டுவிட்டனர்.

     நகரம்-நகர

     நகுதல் = விளங்குதல். நகு-நகர் = விளங்கும் மாளிகை,
     மாளிகை யுள்ள பேரூர்.

     நகர்-நகரி = மாளிகையுள்ள பேரூர்.

     நகர்-நகரம் = பெருநகர்.

நசி-நச் (naš)

     நொள்-நொய்-(நய்)-நை.

"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்."
(தொல். 56)

     நைதல் = நசுங்குதல், கெடுதல்.

     நை-நசி-நசியல். நசி-நசுங்கு-நசுங்குணி.

நடி-நட், ந்ருத்

     நளிதல் = ஒத்தல். நளி-நடி. ஒ. நோ: களிறு-கடிறு.

     நடித்தல் = ஒத்து நடத்தல், நாடகம் நிகழ்த்தல், கூத்தாடுதல்,
     பாசாங்கு செய்தல்.

     நடி-நடம்-நட்டம்.

நடம்-நட ()

நட்டம்-ந்ருத்த

     நடி-நடனம்.