தீ-தீ (இ. வே.)
- ஒளிர்
தீதல்=எரிதல்,
கருகுதல். தீத்தல்=எரித்தல், கருக்குதல். க.சீ.
தீ-தீய்.
தீய்தல்=தீதல். தீய்த்தல்=தீத்தல். தீ-தீவு-தீவம்=விளக்கு. இனி,
தேய்-தீய்-தீ என்றுமாம்.
தேய்-தேயு
= நெருப்பு (பிங்.).
தேய்-தேய்வு-தேவு
= 1. தெய்வம் (பிங்.).
"நரகரைத்
தேவுசெய் வானும்" |
(தேவா.
696: 2)
|
2.
தெய்வத் தன்மை.
தேவு-தேவன்
= கடவுள், அரசன், கணவன், தலைவன்.
தேவி
= தெய்வ மகள், அரசி, தலைவி.
தேய்வு-தெய்வு-தெய்வம்.
"தெய்வ
முணாவே மாமரம் புட்பறை" (தொல்.பொருள். 18).
ம.
தெய்வம், தெய்யம், தெ. தேவுடு.
பண்டை
யுலகில் நெருப்பே தெய்வமாகவும் தெய்வ வடிவாகவுங்
கொள்ளப் பெற்றது.
ஒ.
நோ: சுள்-சுர்-சுரம்-சுரன் = தேவன்.
குறிஞ்சி
மக்கள் முருகனைச் சேயோன் (சிவந்தவன்) என்றது
நெருப்பு வடிவம்பற்றியே.
Gk.
theos, L. deus.
தெய்வம்-தைவ
வடவர்,
திவ் (ஒளிர்) அல்லது த்யு என்றொரு செயற்கை
யடியினின்று, த்யௌஸ் (ஒளியுள்ள வானம்), திவஸ் (பகல், நாள்), தேவ
(விண்ணுலகத்தது), திவ்ய (தெய்வத் தன்மையுள்ள) என்னுஞ் சொற்களை
அமைத்துள்ளனர். த்யு என்பது தெய்வம் என்னுஞ் சொல்லினின்றும்,
திவ் என்பது தேவன் என்னுஞ் சொல்லினின்றும் திரித்துக்கொண்டவையே.
தோட்டி-தோத்ர
(tottra)
வடவர்
இதற்குக் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன்
திரிபே.
தோரணம்-தோரண
துருவு-தூர்-தோர்-தோரணம்
= தெருவிற் குறுக்காகக் கட்டும்
சுவடிப்புத் தொங்கல்.
தூர்தல்
= புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல்.
|