இப்
பொருள்வரம்பு ஏனைமொழிகளில் இல்லை.
ம.
தா, க. தா. Gk. didomi, L. do.
தா-தா (இ. வே.)
= தருபவன்.
தா
= பிள்ளையைத் தந்தவன் (அப்பன்).
தாதா
(தாத்தா) = தந்தையின் தந்தையாகிய பாட்டன். தெ.,க. தாத்த.
தாகம் - தாஹ
தகு - தவு - தவி - தவம் = வெப்பம், வெப்பம் பசிதாகம்
முதலியவற்றால் உடலை வாட்டும் துறவுவினை,அல்லது இறை வேண்டல்
வினை.
"சுடச்சுடரும்
பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" |
(குறள்.
537
|
தவு
- தவி - தாவம். தவித்தல் = நீர்வேட்கை யுறுத்தல்
ஒன்றைப்பெறப் பெருவேட்கை கொள்ளுதல்.
தாபம் - தா
To
thirst after என்னும் ஆங்கில வழக்கை நோக்குக.
தாடி-தாடிகா (d.
h)
தாடி
= 1. மோவாய். "சுருளிடு தாடி" (சிலப். 27: 181).
2.
மோவாய் மயிர்.
"மருப்பிற்
றிரிந்து மறிந்துவீழ் தாடி" |
(கலித்.
15:6)
|
3.
மாட்டின் அலைதாடி.
"பேருடற்
றழைந்த தாடி" |
(திருவாலவா.
36 : 24)
|
4.
சேவற் கழுத்தின் தொங்குசதை.
தாழ்தல்
= தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழி-தாடி.
ஒ.
நோ: தாழ்வாய் = மோவாய் (பிங்.). தாழ்வாய்-தாழ்வாய்க் கட்டை.
தாண்டகம்-தண்டக
தாண்டு-தாண்டகம்
= 26 எழுத்து வரம்பைத் தாண்டிவரும் மண்டில
(விருத்த)ச் செய்யுள்.
தாண்டவம்-தாண்டவ
தாண்டுதல்
= குதித்தாடுதல் (பிங்.) தாண்டு-தாண்டவம் (பிங்.).
2.
கூத்துவகை
(திவா.).
|