தமிழ்த்
தருக்கநூல் எழுபொருட் பாகுபாட்டை அடிப்படை யாகக் கொண்டது. 'தர்க்க பரிபாஷை' என்னும்
நூலிற் காட்டப் பெற்றுள்ள அகத்தியத் தருக்க நூற்பாக்களைக் காண்க. தமிழ்த் தருக்க
நூலையே வடவர் வைசேடிகம் என வகுத்தனர்.
தவி-தப் (இ.
வே.)
தவித்தல்
= வெப்பமாக்குதல், நீர்வேட்கை யுண்டாக்குதல். தவிக்கிறது என்னும் வழக்கை நோக்குக.
தவிப்பு
- தாகம்.
"நிரப்புறு
தவிப்பினை யொழித்திட" (அரிச்.பு.விவாக. 107).
தவி-தாவம்-தாகம்
= நீர்வேட்கை.
தவி-தவம்
= வெப்பத்தால் உடம்பை வருத்தி ஐம்புலனையடக் குதல்.
தவம்-தவன்
= தவஞ்செய்பவன். மாதவன்=பெருந்தவஞ் செய் தவன்.
"மாதவர்
நோன்பு மடவார் கற்பும்" (மணிமே. 22:208).
தவம்-தபஸ்
"உற்றநோய்
நோன்றல் உயிர்க்குறுகண்
செய்யாமை
அற்றே தவத்திற் குரு" |
(குறள்.
261)
|
உற்ற
நோயுள், வெயிலின் வெம்மையும் பசிதாகத்தா லுண்டாகும் உடம்பின் வெம்மையும் அடங்கும்.
தளம்-தல
தள்-தளம்
= அடி, அடிப்பரப்பு.
இதற்கு
வடவர் காட்டும் ஸ்த்ரு என்னும் மூலம் பொருந் தாமை காண்க. ஸ்த்ரு = சிதறு.
சிதறு
என்னும் தென்சொல்லே, strew என்னும் ஆங்கிலச் சொற்கும் ஸ்த்ரு என்னும் வடசொற்கும்
மூலமாகத் தெரிகின்றது.
தா-தா (d)-இ.
வே.
பழந்தமிழ்
திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம் என்னும் உண்மையைக் காட்டுஞ் சொற்களுள்,
தா என்பது ஒன்றாகும்.
"தாஎன்
கிளவி ஒப்போன் கூற்றே" |
(தொல்.
929)
|
"அவற்றுள்,
தருசொல்
வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை
முன்னிலை ஆயீ ரிடத்த."
|
(தொல். 512)
|
|