பக்கம் எண் :

மொழியதிகாரம்9

தாளம்-தால

     தாள் = கால், அடி. தாள்-தாளம்=ஆடுபவர் காலால் தட்டும் காலக்
கணிப்பு, ஆட்டிற்கும் பாட்டிற்கும் உரிய காலக் கணிப்பு, காலக்
கணிப்பிற்குத் தக்க இசைக்கருவி.

தாளி-தால

     தள்-தாள்-தாளி=திரண்ட கூந்தற்பனை.

தானம்-தான (இ.வே.)

     தள்ளுதல் = ஈனுதல் (உள்ளிருந்ததை வெளித்தள்ளுதல்).

     (வாழை) குலை தள்ளுதல் என்னும் வழக்கை நோக்குக.

     தள்-தள்ளை = தாய். ம. தள்ள, தெ. தல்லி.

     தள்ளுதற் சொல் போன்றே ஈனுதற் சொல்லும் இருதிணைக்
கும் பொதுவாம். ஈன்றாள் = தாய்.

     "ஈனுமோ வாழை யிருகாற் குலை" (பழ. 221).

     ஈ-ஈன். ஈனுதல் = இடுதல். மணற்கீன்ற முத்தம்'=மணலிலிட்ட
     பருமுத்து.

     தள் - (தர்) - தரு - தா - த.

     தரு-தருகிறான், தருவான், தருகை, தரவு.

     தா-தா, தானம்.

     த-தந்தான், தத்தம்.

     தருதல் = 1. மகப்பெறுதல்.

     "தந்தவளைப் பணிந்தவளும்" (சேதுபு. தேவிபுர.7).

     தந்தவள் = தாய்.

     2. மரஞ்செடிகள் பயன்தருதல்.

திடம்-த்ருட (dŠdha) - இ. வே.

     தில்-திள்-திண்-திண்மை = செறிவு, பருமன், வலிமை, உறுதி,
     கலங்கா நிலைமை.

     திண்-திண்ணம் = இறுக்கம், வலிமை, தேற்றம் (நிச்சயம்)
     ம. திண்ணம்.

     திண்ணன் = வலியன், வல்லுடற் கண்ணப்பன்.

     திண்ணகம் = செம்மறியாட்டுக்கடா. திண்ணக்கம்=நெஞ்சுரம்.

     திண்ணிமை = மனவுறுதி. திண்ணியன்=வலியவன், திட மனத்தன்