திண்ணை
= திரண்ட மேடு. ம. திண்ண, த., தெ. திண்ணெ.
திணை
= திரட்சி, குலம், வகுப்பு, பொருள் வகுப்பு, நிலவகுப்பு.
திண்ணம்-திணம்
= திண்மை. திணம்-திணர் = செறிவு. திணர்த்தல் =
செறிதல், கனமாகப் படிந்திருத்தல்.
திண்-திணி.
திணிதல் = செறிதல், இறுகுதல். க. திணி.
திணிகம்
= நெருங்கிச் செய்யும் போர்.
திணிப்பு-திணிம்பு
= செறிவு. க. திணிம்பு.
திணுங்குதல்
= செறிதல், உறைதல். திணுக்கம் = செறிவு, கட்டி.
திண்-திண்பு
= உறுதி. க. திண்பு.
திண்பு-திட்பு-திட்பம்
= வலிமை, மனவுறுதி, சொற்பொரு ளுறுதி,
தேற்றம்.
திண்-திண்டு
= பருமன், சிறுதிண்ணை, பஞ்சணை, தெ., ம. திண்டு.
திண்டு-திட்டு
= சிறு மேட்டுநிலம், மணற்குன்று, ஆற்றிடைக்
குறை. ம.,
க. திட்டு.
திட்டு-திட்டம்
= தேற்றம், நிலைபேறு, உறுதியான ஏற்பாடு. தெ.
திட்டமு, க. திட்ட.
திட்டு-திட்டை
= திண்ணை, மணல்மேடு, மேட்டுநிலம். ம. திட்ட.
திட்டாணி
= மரத்தைச் சுற்றிய மேடை.
திட்டம்-திடம்
= பருமன், வலிமை, உறுதி, கலங்காநிலை, நிலை
தவறாமை, மனவுறுதி, உண்மை, தேற்றம்.
திடம்-திடன்-திடல்
= மேட்டுநிலம், பொட்டல்.
திடல்-திடர்
= புடைப்பு, மேட்டுநிலம், குப்பைமேடு, சிறுதீவு.
திடர்-திடறு
= மேட்டுநிலம், கரடு.
திடாரி
= திடமனத்தன். தெ. திடமரி. திடாரிக்கம் = மனத்திடம்.
திண்டு-திண்டன்
= தடியன். திண்டி = பருமன், தடித்தவள், யானை.
வடவர்
காட்டும் த்ருங்ஹ் அல்லது த்ருஹ் என்னும் மூலம், திற
என்னும் தென்சொற் றிரிபே. திறத்தல் = திறனாதல்.
தித்தி-த்ருத்தி
(இ.வே.)
துருத்துதல்
= முன்தள்ளுதல், துருத்து - துருத்தி = காற்றை முன்
தள்ளும் உலைக்களத் தோற்கருவி, நீரை முன்வீசுங் கருவி, ஊதும்
தோலிசைக்கருவி, முன்தள்ளிய வயிறு.
துருத்தி-துத்தி-தித்தி.
|