வடவர்
காட்டும் த்ரூ (d. ) என்னும் சொற்குப் பிளத்தல் என்பதே
பொருள்.
திமி-திம, திமீ
திம்மை
= பருமன். தெ. திம்மெ.
திம்மன்
= பருத்த ஆண்குரங்கு. க. திம்ம, தெ. திம்மடு.
திம்மலி = பருத்தவள். திம் - திமி = எல்லாவற்றுள்ளும் பருத்த மீன்.
திரு-ச்ரி (ஸ்ரீ)
- இ.வே.
தில்லுமுல்லு
= திண்டுமுண்டு. தில்-திர்-திரள்.
திர்-திரு
= திரண்ட செல்வம், திருமகள், சிறப்பு, பொலிவு, அழகு,
நற்பேறு, தெய்வத்தன்மை,
தூய்மை.
ஒ.
நோ: வெறுத்தல் = மிகுதல். வெறுக்கை = மிகுதி, செல்வம்.
செல்வத்தாற்
சிறப்பும் பொலிவும், அரசச்செல்வத்தால் தெய்வத்
தன்மையும், தெய்வத்தன்மையால் தூய்மையும் ஏற்படு மென்பது
பண்டை யுலகக் கருத்து. செல்வத்தாற் சிறப்பும் பொலிவும் இக் காலத்து
முண்டு.
திரு
என்பது தெய்வத்தன்மையை அல்லது தூய்மையைக் குறிக்கும்
அடைமொழியாகக் கொள்ளப் பெற்றது.
எ-டு:
திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருச்சிற்றம்பலம்,
திருநீறு, திருப்பள்ளியெழுச்சி, திருமுறை, திருமேனி, திருவிழா,
திருவிளையாடல், திருவுளம்.
தொன்றுதொட்டுத்
திருவரங்கம் என்று வழக்கிவந்த இடப் பெயர்,
இன்று ஸ்ரீரங்கம் எனத் திரிந்து வழங்குகின்றது.
வடவர்
வடமொழியிலுள்ள சொற்கட்கு வலிந்தும் நலிந்தும்
மூலங்காட்டும் தம் வழக்கத்திற்கேற்ப, ச்ரி என்னும் சொல் ச்ரி1 அல்லது
ச்ரீ1 என்பதினின்று திரிந்ததாகக் கூறுவர்.
ச்ரி1
= சார் (to lean). ச்ரீ2 = ஒளி. மா. வி. அ. இரண்டையும்
இணைத்துக் கூறும்.
தீய்-தீ (d)
இ.வே.
தீய்தல்
= எரிதல், விளங்குதல்.
தீய்
- தீய்வு - தீவு - தீவம் = விளக்கு.
தீவம் - தீப
|