பக்கம் எண் :

12வடமொழி வரலாறு

தீவு - த்வீப (இ.வே.)

     தீர்தல் = நீங்குதல். தீர்- தீர்வு - தீவு = பெருநிலத்தினின்று
     நீங்கி யிருக்கும் சிறுநிலம், ஒரு நிலத்தினின்று நீங்கியிருக்கும்
     இன்னொரு நிலம்.  ஒ. நோ: கோர்வை-கோவை.

     தீவு-தீவம்-வ. த்வீப.

     வடவர் த்வி+அப் என்று பகுத்து, இருபுறமும் நீராற் சூழப்பெற்ற
தென்று பொருட்காரணங் கூறுவர். நாற்புறமும் நீராற் சூழப்பெற்ற தீவிற்கு
இவ் விலக்கணம் பொருந்தாமை காண்க.

துந்தி-துந்த, துந்தி

     உந்துதல் = முன்தள்ளுதல். உந்து - உந்தி = கொப்பூழ்.

     உந்து - துந்து - துந்தி = முன்தள்ளிய வயிறு, கொப்பூழ்.

     துந்தி-தொந்தி = முன்தள்ளிய வயிறு. ம. தொந்தி

     வடவர் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன் திரிபே.

து(ப்பு)-து1 (இ.வே.) = வலியுறு

     துப்பு = வலிமை. "கெடலருந் துப்பின்" (அகம். 105). துத்தல்=
உண்ணுதல். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி" (குறள். 12).

     "உண்டவுடல் உரஞ்செய்யும்." ஆதலால், உண்டற் கருத்தினின்று
வலிமைக் கருத்துத் தோன்றியிருக்கலாம்.

     து-துவ்வு. துவ்வுதல்=1.நுகர்தல். "துவ்வா நறவின்" (பதிற்.60:12). 2.
வலியுறுதல். "தான்றுவ்வான்" (குறள். 862).

     து-தூ = வலிமை. "தூவெதிர்ந்து பெறாஅ" (பதிற். 81: 34).

துருவு-த்ரூ (இ.வே.)

     துள்-துரு-துருவு. E. through, OS. thruh.

துர-த்வர் = விரை, முடுகு.

துரை-த்வரா = வேகம், விரைவு.

துலை-துலா

     துல்-துன். துன்னுதல் = பொருந்துதல்.

     துல்-துல்லியம் = ஒப்பு, சரிமை, ஒப்பக் கையெழுத்து.

     துல்லியம்-துல்லிபம்.

     துல்-துலம் = நிறைகோல், துலாநிறை.