விண்விண்
= 1. யாழ் நரம்பு இசைத்தற் குறிப்பு.
2.
புண்ணினால் நரம்பு நோவெடுத்தற் குறிப்பு.
விண்-வீணை.
"நாரதன்
வீணை நயந்தெரி பாடலும்" (சிலப். 6 : 18).
"மங்கலம்
இழப்ப வீணை" (சிலப். 6 : 22).
"மாசில்
வீணையும் மாலை மதியமும்" (அப்பர்).
ஆரியர் வருமுன்பே தலைக்கழகத் தமிழ் முத்தமிழாய்
வழங்கி
வந்ததினாலும், நாரதர் தமிழ்நாடு வந்தே இசைத்தமிழ் கற்றுப்
'பஞ்சபாரதீயம்' என்னும் இசைத்தமிழ் நூலியற்றியதினாலும். கி.பி. 2ஆம்
நூற்றாண்டுச் சிலப்பதிகாரம் வீணையைக் குறித்தலாலும், 7ஆம்
நூற்றாண்டில் அப்பர் "மாசில் வீணை" (குற்றமற்ற யாழ்) என்று
பாடியிருத்தலாலும், வீணை 11ஆம் நூற்றாண்டில் வடக்கினின்று வந்த
ஆரிய இசைக்கருவி என்பார் கூற்றுத் தமிழ் வெறுப்பாலெழுந்த தென்க.
வீணை
தமிழர் இசைக்கருவியே என்பதைப் 'பாணர் கைவழி' என்னும்
நூலுட் கண்டு தெளிக.
வடவர்
வேண் என்றொரு சொல்லைப் படைத்து இசைக்கருவி
யியக்குதல் என்று பொருள் கூறி, வேணு (மூங்கில்) என்னும் சொல்லோடு
தொடர்பு காட்ட விரும்புவர். வேணு என்பது வேய் என்னும்
தென்சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. மேலும், அதன்
பொருந்தாமையையும் விண் என்பதன் முழுப் பொருத்தத்தையும்
பகுத்தறிவுள்ளார் கண்டறிக.
மா.
வி. அ. "of doubtful derivation" என்று குறித்திருத்தலையும்,
மூலங் காட்டாமையையும், வேண் என்னும் சொல்லைப்பற்றி "prob.
artificial" என்று கருதுதலையும், நோக்குக.
வெஃகு-பிஷ்
(bh) - இ.வே.
வெள்ளுதல்
= விரும்புதல். வெள்-வெண்டு. வெண்டுதல் =
ஆசைப்படுதல். வெள்-வேள். வேட்டல் = விரும்புதல்.
வேள்-
வேண்டு. வேண்டுதல் = விரும்புதல், கெஞ்சுதல், இரத்தல்.
வெள்-வெள்கு-வெஃகு.
வெஃகுதல் = விரும்புதல், பேராசை
கொள்ளுதல், பிறர் பொருளை விரும்புதல்.
வெஃகு-க.
பேக்கு (b). E. beg.
பிக்ஷ்
என்பது பஜ் (bh) என்பதன் ஆர்வ வினையென்றும், பங்கு
கொள்ள விரும்பு என்று பொருள்படுவதென்றும், மா.வி.அ. கூறும்.
"Desid. of bhaj, lit. ‘to wish to share or partake."
|