வித்யா
என்னும் வடசொல், தமிழில் வித்தை, விச்சை , விஞ்சை
என முறையே திரியும். ஆரியர் இதைக்கொண்டு, விழி என்பதன் திரிபே
வித் என்பதை அறியாத தமிழரை மயக்குவர்.
வீ-வீ (இ.
வே.)
விள்-(விய்)-வீ.
வீதல் = நீங்குதல்.
"வினைப்பகை
வீயாது பின்சென் றடும்" |
(குறள்.
207)
|
2.
மாறுதல். "வானின் வீயாது சுரக்கும்" (மலைபடு. 76).
3.
சாதல். "சிலைத்தெழுந்தார் வீந்தவிய" (பு. வெ. 3:7).
4.
அழிதல். "வீயாச் சிறப்பின்" (புறம். 15).
வீ
= 1. நீக்கம் (பிங்.). 2. சாவு (பிங்.). 3. அழிவு.
"வீகலந்த
மஞ்ஞைபோல்" (சீவக. 1104).
வடவர்
வி-இ5 என்று மூலங்காட்டி, வ்யய் (vyay)=பிரிந்து போ
(to go apart or in different directions) என்று விரித்து விளக்குவர்.
வி
என்பது விள் என்பதன் திரிபு. இ என்பது இயல் என்பதன்
முதனிலை. இயல் = செல்கை, நடக்கை.
வீசு1-வீஜ்
= விசிறி - வீசு
வடவர்
விஜ்1 (விசையாக இயங்கு) என்பதை மூலமாகக் கருதுவர்.
அதுவும் விசை என்பதன் திரிபே.
விசு-விசை.
விசுவிசு = விருவிரு. விசுவிசென்று பிடித்தெரிந்து விட்டது
என்னும் வழக்கை நோக்குக.
விசு-விசிறு-விசிறி.
விசிறு = வீசு. விசு-வீசு.
வீசு2-வாஸ்2
வீசுதல்
= மணம் வீசுதல், மணத்தல். வீச்சம்-மணம், நாற்றம்.
நாறு
என்னும் சொற்போன்றே வீசு என்பதும், செய்யுள் வழக்கில்
நறுமணத்தையும் உலக வழக்கில் தீய மணத்தையும் உணர்த்தும்.
வாஸ்-வாஸ
= மணம். வாஸ் என்பது பெயரடி வினையே. மா.வி.அ.
"perhaps only Nom.fr.next" என்று குறித்திருத்தல் காண்க. 'next'
என்றது ஸ என்னும் சொல்லை.
வீணை-வீணா
விண்
= வில் நரம்பு தெறித்தற் குறிப்பு.
|