பக்கம் எண் :

96வடமொழி வரலாறு

வேண்-வேந் (இ.வே.)

     வெள்-வெண்டு. வெள்-வேள்-வேண்-வேண்டு. வேள்-வேட்பு,

     வேட்கை. வேண்+அவா=வேணவா. வேணும் (உ.வ.)= வேண்டும்.

     வெள்-வெள்கு-வெஃகு.

     வேந் = பேரார்வங்கொள், ஏக்கமுறு (இ.வே), பொறாமைப்படு
     (இ. வே.).

     தாது பாடம் இதை வேண் (பற்று, எடு) என்னும் சொல்லின்
மறுவடிவாகக் கொள்வது பொருந்தாது.

வேலை-வேலா = கடல்

     "வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாயிற்று"
(பழமொழி) 2. சூழெல்லை.

     வேல்-வேலை = 1. எல்லை.

     2. நிலத்திற்கு எல்லையாக வுள்ள கடல்.

     "வேலை நஞ்சுண் மழைதரு கண்டன்" (திருவாச. 6 : 46).

     3. கடற்கரை (பிங்.). "பௌவ வேலை" (கந்தபு.மேருப்.46).

வேளை-வேலா

     வேலை = 1. எல்லை. காவலெல்லை, அமையம்.

     ஒ.நோ: "கூறிய வெல்லையில்" (கம்பரா. விபீடண. 97).

     2. காலம் (பிங்.).

     "மணந்தா ருயிருண்ணும் வேலை" (குறள். 1221).

     வேலை-வேளை=1. அமையம். எ-டு: வந்த வேளை நல்ல வேளை.

     2. சிறுபொழுது. எ-டு: காலைவேளை.

     3. பகற்பகுதி. எ-டு: இருவேளைப் பள்ளி.

     நாட்பகுதி. எ-டு: பகல்வேளை, இராவேளை.

     5. மருந்துண்ணும் நேரம். எ-டு: மூவேளை மருந்து.

     6. நேரம், காலப்பகுதி. எ-டு: வேளைபார்த்து அனுப்பி வைக்க
     வேண்டும்.

வைகை-வேகவதீ

     வைகுதல்=தங்குதல். வைகு-வைகை-தங்கிச் செல்லும் ஆறு.

     தங்கிச் செல்லுதலாவது மெல்லச் செல்லுதல்.

     "வையை யன்ன வழக்குடை வாயில்" (மதுரைக். 35: 6).

     "வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்" (புறம். 71).