பக்கம் எண் :

வல்1 (வளைவுக் கருத்துவேர்)109

வாளிபோதல் = குதிரை வட்டமாயோடுதல். "மாதிர முறப்பல வாளி போதுமால்" (பாரத. சூது. 121).
     வாளி-வ. பாலி. வடசொல்லின் பகர முதலை நோக்குக.
வாள்-வாடு-வாட்டம் = சாய்வு. அங்கணம் வாட்டஞ் சாட்டமா யிருக்கவேண்டும் (உ.வ.).
வாளி-வாசி = அணிவளைவான திருவாசி. "மாணிக்க வாசி முந்து சிங் காதனம்" (திருவாலவா. 37: 75).
     வாசி-வாசிகை = திருவாசி. ஒ.நோ: உளு-உசு, இளி-இசி.