பக்கம் எண் :

110`வா' என்னும் வினைச்சொல் வரலாறு

`வா' என்னும் வினைச்சொல் வரலாறு
     வள்-வர்-வார்-வ. வர்-வரு.
     சொல்லாக்கத்தில் ட த ல ழ ள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும்.
எ-டு :
ட - ர :
கடு-கடி-கரி, படவர்-பரவர்.
த - ர :
விதை-விரை.
ல - ர :
உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர்,பந்தல்-பந்தர்.
ழ - ர :
புழை-புரை.
ள - ர :
அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர், தெளி- தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி,முள்-முர்-முரு-முருகு (இளமை), விள்- விர்-விரி.
     முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு கூடியும் வழங்கி வருகின்றன.
எ-டு:
முதனிலைமுற்காலப் புடைபெயர்ச்சிஇக்காலப் புடைபெயர்ச்சி
நகுநக்கான்நகைத்தான்
தள்தட்டான், தட்கின்றான், தளைத்தான்,
தட்பான்தளைக்கின்றான்,
தளைப்பான்
கள்கட்டான், கட்கின்றான்,களவுசெய்தான், களவு
கட்பான்செய்கின்றான், களவு
செய்வான்.
     களவாண்டான், களவாள்கின்றான், களவாள்வான்; களவாடி னான், களவாடுகின்றான், களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணைவினை கூடி முதனிலையாகிப் புடைபெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணைவினைகள். களவுபண், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே.