`வா' என்னும் வினைச்சொல் வரலாறு | 117 |
| முன்னிலைப்படுத்தின், நான் வருகிறேன். நான் வருகிறேன் என்று தனித்தனி சொல்லலாம். அவ்வாறன்றி நான் செல்கிறேன் எனின், அது படர்க்கையானின் இடத்தை நோக்கியதாகவே யிருத்தல் கூடும். | இனி, வார் அல்லது வா என்னும் வினைச்சொல் பல்வேறு வடிவில் திரவிட மொழிகளில் வழங்குவது மட்டுமன்றி, மேலை ஆரிய மொழியாகிய இலத்தீனிலும், சென்று மூலத்தை யொட்டி வழங்குவது வியக்கத் தக்கதாகும். | ளகரமெய் தமிழிலும் திரவிடத்திலும் னகரமெய்யாகவுந் திரியும். | | எ-டு: தெள்-தென்-தேன், தெளிவு, தேறல் என்னும் சொற்களை நோக்குக. | | கொள்-தெ. கொன், கொனு, தெ. கொனி = கொண்டு. | வள்-வன்-வென்- L. veni to come. Veni என்னும் மூலத்தினின்று, advent, avenue, circumvent, convene, event, intervene, invent, prevent, revenue, subvent, supervene, venue முதலிய சொற்கள் திரிந்துள்ளன. இவற்றுள் ஒவ்வொன்றினின்றும் சில பல சொற்கள் கிளைத்துள்ளன. | | எ-டு: convene-convent, conventual, convention, conventional, conventionary, conventicle, convenient, convenience முதலியன. | | கலிபோர்னியாப் பல்கலைக்கழகச் சமற்கிருதமொழி நூற் பேராசிரியர் எம்.பி. எமெனோ (M.B. Emeneau) திரவிட மொழிநூலும் இன நூலும் நாட்டுப்புறக் கதைகளும்பற்றி எழுதி, அண்ணாமலை பல்கலைக் கழகம் வெளியிட்ட கட்டுரைத் தொகுதியில் (Collected Papers) 6ஆம் கட்டுரை `வா' `தார' என்னும் திரவிட வினைச்சொற்கள் (The Dravidian Verbs 'come' and give) என்பது. | அதில், அவர் தமக்குத் தமிழிற் சிறப்பறிவின்மையாலும் தமிழ்ப் பொத்தகங்கள் கிட்டாமையாலும் ஈ, தா, கொடுவென்னும் சொற்களின் நுண்பொருள் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள முடியவில்லை யென்று எழுதியுள்ளதற் கொப்பவே, 'வா', 'தா' என்னும் வினைச்சொற்கள்பற்றிய அவர் ஆராய்ச்சி முடிபுகளும் உள்ளன. | அவை வருமாறு: | 1. | வ, த என்பன மூலத்திரவிட அடிகள் (Proto Dravidian stems). | 2. | அ, அர் என்பன அவ் வடிகள் தன்மை முன்னிலை வினைகளாகும் போது சேர்க்கப்படும் இடைமாற்ற ஈறுகள் (transition suffixes). | 3. | அ உடன்பாட்டு வடிவுகளிலும், அர் எதிர்மறை வடிவுகளிலும் ஆளப்பட்டன. | 4. | அ+அ = ஆ என்பது சொல்லொலியன் மறுநிலை மாற்று (Morphonemic alternation). | |
|
|