பக்கம் எண் :

14வேர்ச்சொற் கட்டுரைகள்

     உலா. 78). 3. ஒருசார் வெள்ளாளருக்கும் செங்குந்தருக்கும் ஒருசார் தஞ்சை மாவட்டச் சமணருக்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். க. மொதலிக(g).
     முதலியார்-மேற்குறித்த மூவகுப்பார்க்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர்.
     முதலியோர் = முதலிய பிறர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவர், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் முதலியோ ராவர்.
     முதலியாண்டான் = 1. இராமானுசரின் மாணவரான ஒரு திருமாலடியார். 2. இராமானுசரின் திருவடி நிலை மகுடம்.
     முதன்மை = தலைமை. "கணித மாக்களை முடிவுற நோக்கியோர் முதன்மை கூறி" (கம்பரா. மந்தரை. 1).
     முதலிமை = தலைமை (புதுக். கல்வெட்டு, 361).
     முதலாளி-1. மூலவைப்புள்ளவன். 2. பெருநிலக்கிழார். 3. தொழிற்சாலை அல்லது வணிகநிலைய உரிமையாளர். 4. தலைவன்.
     முது-முதார்-முதாரி = முன்கை வளையல். "முன்கை முதாரியு மொளிகால" (முத்துக். பிள். 17).
     முந்து-முது-முதுமை = 1. பழமை (பிங்.). 2. மூப்பு. "இளமை நாணி முதுமை யெய்தி" (மணிமே. 4 : 107). 3. முதுமொழி (சூடா.). 4. முற்றின நிலை (பிங்.). 5. முதுகாஞ்சி. "கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்" (தொல். புறத். 24).
     முதுகண் = 1. முதன்மைக் களைகண். "முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென" (பெருங். உஞ்சைக். 36 : 198). 2. பேரறிவுரைஞன்.
     முதுகாடு = 1. பழங்காடு (திவா.). 2 சுடுகாடு. "முதுகாட்டிடை.......நடமாடி" (தேவா. 773 : 1).
     முதுகுடி = குறிஞ்சியும் முல்லையும் இணைந்து வறளும் பாலை நிலத்தில்"கற்றோன்றி மண்டோன்றாக் காலத்து வாளொடு முற்றோன்றி மூத்த" மறவர் குலம். முதுக்குடி. "முரசுகடிப் பிகூஉம்
     முதுக்குடிப் பிறந்தோன்." (மணிமே. 1 : 31).
     முதுகுரவர் = தாய் தந்தையர். "எம்முது குரவ ரென்னுற் றனர்கொல்"      (சிலப். 16 : 60).
     முதுசொம் = முன்னோர் தேட்டு (யாழ்ப்.).
     முதுசொல் = பழமொழி. "தம்பானை சாய்ப்பற்றா ரென்னு முதுசொல்      லும்" (திருவிசை. வேணாட். 2).
     முதுபாலை = காட்டிற் கணவனை யிழந்த தலைவி தனிநின்று புலம்புவதைக்      கூறும் புறத்துறை.