பக்கம் எண் :

முல்2 (முன்மைக் கருத்துவேர்)15

 
"நனிமிக சுரத்திடைக் கணவனை யிழந்து
 தனிமகள் புலம்பிய முதுபா லையும்"
(தொல். புறத். 24)
 
     முதுவெழுத்து = தேறின எழுத்து (w.).
     முதுவேனில் = கடுங்கோடை.
     முதுவர் = 1. மூத்தோர். "தமராகிய முதுவர்" (கந்தபு. வள்ளியம். 43). 2. அறிவாற்றல் மிக்கோர். "முதுவருள் முந்து கிளவாச் செறிவு" (குறள். 715). 3. மந்திரிமார். 4. புலவர். 5. ஒருசார் மலைவாணர்.
     முதுவோர் = 1. அரசன், ஆசிரியன், தாய், தந்தை, அண்ணன் முதலிய பெரியோர். "முதுவோர்க்கு முகிழ்த்த கையினை" (சிறுபாண். 231). 2. மூத்தோர். 3. அமைச்சர். 4. அறிவான் மிக்கோர். 5. புலவர்.
     முதியன் = மூத்தவன். "இளையரு முதியருங் கிளையுடன்றுவன்றி" (அகம். 30).
     முதியன் = 1. மூத்தவன். (கலித். 25). 2. அகவை முதிர்ந்தோன். 3. நான்முகன். "தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக" (கலித். 2).
     முதியாள் = 1. மூத்தவள். 2. தேவராட்டி. "தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு" (பெரியபு. கண்ணப்ப. 52).
     முதுவல் = பழைமையாற் பழுதானது.
     முது - முதார். முதார்மாடு = பால் முற்றிய ஆன்.
     முதார் - முதாரி = 1. முதுமை. "முதாரிப் பாண" (புறம். 138). 2. பால் மறக்குங் கன்று(W.). 3. முதார் மாடு (சங். அக.). 4. முற்றியது. முதாரிக்காய். (சிலப். 16 : 24, அரும்.).
     முது = பேரறிவு. "முதுவா யிரவல" (சிறுபாண். 40).இளமையில் அறிவின்மையும் முதுமையில் அறிவுண்மையும், பட்டறிவின் மை யுண்மையால் ஏற்படும் இயற்கை நிலைமையென்பதை, மடம் மு து என்னுஞ் சொற்கள் உணர்த்துதல் காண்க.
     முது - முதுக்கு = அறிவு, தெருட்சி, பேரறிவு.
     முதுக்கு + உறை = முதுக்குறை. முதுக்குறைதல் = அறிவு மிகுதல். "முகத்தின் முதுக்குறைந்த துண்டோ" (குறள். 707). உறைதல் = தங்குதல். 2. பெண் பூப்படைதல் (தெருளுதல்).
     முதுக்குறைவு = 1. பேரறிவு. "ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு" (நீதிநெறி. 33). 2. பெண் தெருளுகை (பூப்படைவு).
     முதுக்குறை = பேரறிவு. "முதுக்குறை நங்கை" (சிலப். 15 : 202).
     முது + குறைவு = முதுக்குறைவு = பேதைமை (சூடா.).