பக்கம் எண் :

10குடியாட்சி

சொல்லை அவர்கள் வழங்காது தம் முன்னைய நாடோடி வாழ்வைக் குறிக்கும் பலர்பால் சொல்லாகிய ‘நாட்டினர்’ என்ற சொல்லையே வழங்கினர். எனவேதான் பிற்கால வடமொழியிலும் ‘நான் பாஞ்சால நாடு சென்றேன்’ என்ற வாசகம் ‘நான்பாஞ்சாலரை அடைந்தேன்’ (அஹம் பாஞ்சாலாந் அகச்சம்) என வழங்கலாயிற்று, செவ்வாய் கண்டம் எனத் தமிழர் அழைத்த இவ்விந்தியப் பெருநிலப்பரப்பில் முதலில் சிந்து ஆற்றின் கரையோரம் தங்கி வாழ்ந்த இவ்வாரியர் படிப்படியாகக் கிழக்கு நோக்கிப் பரந்து கங்கையின் கரையோரங்களில் குடியேற்றங்கள் ஏற்படுத்திய பின்னும் இந்நிலை நீடித்திருந்ததென்று வரலாற்றாசிரியராகிய கே. வி. இரங்கசாமி ஐயங்கார் அவர்கள் கூறுகிறார்கள். * இந்நிலைமாறி அவர்கள் நாடு நகரம் அமைத்த காலம் கி. மு. 7-ம் நூற்றாண்டு (இன்றைக்கு இரண்டாயிரத்தறு நூறு ஆண்டுகளுக்கு முந்திய காலம்) ஆகும்.

   இங்ஙனம் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் ஆரியரிடையே ஊர், நகரம், நாடு ஆகிய பாகுபாடுகள் இல்லை. அவர்கள் கூடிவாழும் வாழ்க்கையில் தொடக்கத்தில் ஏற்பட்ட பாகுபாடு குடும்பமேயாகும். சிறுகுடும்பங்களில் தந்தையும், சற்றுவிரிவுபெற்ற குடும்பங்களில் மூத்த ஆடவரும் தலைமை நிலையுடையவராய், குடும்ப உறுப்பினரிடையே ஒழுங்கை நிலை நிறுத்தி அதனை மீறியவரை ஒறுத்து வந்தனர். சமய வழிபாடுகளிலும் இறந்தவர்கட்குச் செய்யும் இறுதி வினைகளிலும் அவரே சமயத் தலைவராகவும் இருந்துவந்தார். பெருங்குடும்பங்கள் கோத்திரங்கள் என்று வழங்கப்பட்டன. பலபெருங்குடும்பங்கள் இணைந்து ஒரே

   * கே. வி. ரங்கசாமி ஐயங்கார் எழுதிய ‘இந்திய நாட்டு வரலாறு--முசல்மான்களுக்கு முந்திய காலம்’ என்ற நூல் காண்க.