| தியிலிருந்தனர் என்று சிலரும் கூறுகின்றனர். ஆயினும் இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னிருந்தே இவர்கள் தம் தாயகத்திலிருந்து கூறு கூறாகப் பிரிந்து பச்சை கண்ட இடமெல்லாம் பரந்து சென்றனர் என்றும், இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தெற்கு நோக்கி மேலை ஆசியாவிலும் தென் ஐரோப்பாவிலும் உள்ள அன்றைய நாகரிக உலகத்தின் மீது ஈசல்கள் போல் சென்று மொய்த்தனர் என்றும், இன்றைக்கு மூவாயிரத்தைந் நூறு ஆண்டுகளின் முன் இந்துக் கோசுமலை தாண்டிப் பாரசீகத்திலும், அதன் பின் சுலைமான் மலை தாண்டி வடமேற்கு இந்தியாவிலும், நாடுகளிலும், கிட்டத் தட்ட அதே காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புகுந்தார்கள் என்றும் அறிகிறோம். நாகரிக உலகில் இவ்வாரியர் வரவாலும், அவர்கள் வந்து அந்நாகரிக உலகுடன் உறவு கொண்ட பின் ஏற்பட்ட அவர்கள் நூல்களாலும் மொழிவளர்ச்சியாலும் முல்லைநிலக் காலத்து மனிதன் நாகரிகப் பண்பு பற்றி நாம் பல செய்திகளை அறிகிறோம். உலகின் நடுவிடத்துள்ள மேற்சொன்ன மலைத் தொடர்களுக்குத் தெற்கிலுள்ள விலங்குகளாகிய யானை, சிங்கம், புலி முதலியவையும், அவ்விடத்து வழங்கிய நாகரிகக் குறியீடுகளும் அவர்கள் அவ்விடத்துக்கு வரு முன் பேசிய அவர்கள் மொழியில் இடம் பெறவில்லை. ஆடு மாடுகள் நீங்கலால அவர்கள் அறிந்த உயிர்கள் ஓநாய், முயல், குதிரை முதலியவையே யாகும், நாடு, நகரம், ஊர், நாட்டுமனககள் ஆகியவர்களைக் குறிக்கும் சொற்களும் அம்மொழியில் இல்லை, இந்தியாவில் அம் மக்கள் நுழைந்து நாடு நகரமமைத்த பின் கூட அவற்றைக் குறிக்க ‘நாடு’ என்ற அஃறிணை ஒருமைச் |