| முறை தீத்தேர்வு, மற்போர்த்தேர்வு (Trial by ordeal of fire or wrestling) ஆகியவைகளே, இப்பழம்பசலி முறைகளுக்கு மாறாக ஹென்ரி புகுத்திய முறை அவ்வவ்விடத்துப் பொதுமக்களிடையிலிருந்து தெரிந்தெடுத்த சான்றுக்குழுவினரைப் பொறுப்பாளராக அமர்த்துவதாம். இரண்டாம் ஹென்ரி அரசன் காலத்தில் இம்முறை வழக்குகளுக்கு மட்டுமின்றி வேறு வகைகளிலும் பயன்படுத்தப்பட்டது. 1188-ல் சாலடின் பதி கூற்று வரி (Salladin Tithe) என்ற புது வரி சுமத்தப்பட்டது. அதற்காக மக்கள் உடைமைகளைக் கணித்தறியும்படி அமைக்கப்பட்ட சான்றுப் பொறுப்பாளர் வரி தருவோரின் மொழி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டனராம். மொழித்தரவின் (Vote) வாயிலாக இங்கிலாந்தில் ஒரு குழு முதலில் அமைந்தது இப்போதே எனினும், அக்குழு ஆட்சிக் குழுவன்று; எனவே அதில் பொறுப்பாட்சியின் கருத்து அமையப் பெற்றதாயினும், அது பொறுப்பாட்சியின் முதல் தோற்றுவாய் என்று கூறுதல் இயலாது. ஆங்கில அரசியல் மன்றின் பெயர் ஆகிய பார்லிமென்ட் என்ற சொல் ‘பேசும் அவை’ என்று பொருள்படும். இது ஃபிரஞ்சு மொழிச் சொல் ஆகும். ஆனால் இது ஃபிரான்சில் மடத்துத் துறவியர் வீண் பொழுதுபோக்காகப் பேசும் வம்பர் அவைக்கே முதலில் ஏளனமாக வழங்கப்பட்டதாம்! பின்னர் ஃபிரஞ்சு மன்னர், சமயத் திருப்பெருந்தந்தை (Pope) ஆகியவர்கள் கூட்டிய சமயத் தலைவர் Cergy) கூட்டத்திற்கும் இப்பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அரசியல் மன்றத்துக்குப் ஃபிரான்சில் அப்பெயர் வழங்கவேயில்லை. இங்கிலாந்தில் மூன்றாம் ஹென்ரி கூட்டிய ஒரு கூட்டத்திலேயே அப் |