பக்கம் எண் :

64குடியாட்சி

பெயர் முதலில் வழங்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்குள் அப்பெயர் புதிதாகத் தோன்றி வளரத் தலைப்பட்டுவிட்ட ஆங்கில அரசியல் மன்றத்தின் பெயராக ஆங்கில மொழியில் வேரூன்றி விட்டது.

   இத்தகைய அரசியல் மன்றம் உருவாவதன் முன்னமே அரசன் ஆற்றல் பொதுமக்கள் சார்பில் பெருமக்களால் வரையறுக்கப்படத் தொடங்கிற்று; தொடக்கத்தில் பெருமக்களை யடக்க முயன்ற நார்மானிய மன்னர் பொதுமக்கள் பக்கம் சார்ந்தனராயினும், விரைவில் பொதுமக்கள், பெருமக்கள் என்ற வேற்றுமை மறையலாயிற்று, முதலாம் ஹென்ரியின் பின் ஆண்ட ஸ்டீபன் காலத்தில் அரசுரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் பெருமக்கள் பெரிதும் நலிவுற்றிருந்தனர். இரண்டாம் ஹென்ரி பின்னும் அவாக்ளை அடக்கியதுடன் முதல் ஹென்ரியின் சுவட்டைப் பின்பற்றி உரிமைத் தாளொன்று வழங்கிச் சான்றுப் பொறுப்பாளான முறையையும் நிறுவினான். ஆயினும் இதற்குள்ளாகப் பெருமக்கள் பொதுமக்களையும் அவர்கள் தாய் மொழியையும் முன்போல் புறக்கணிக்காமல் ஏற்று அவர்களுடன் விரைவில் ஒன்றுபடத் தொடங்கினர். எனவே இரண்டாம் ஹென்ரியின் பிள்ளைகளாகிய ரிச்சர்டு, ஜான் ஆகியவர்கள் ஆட்சிக் காலங்களில் எழுந்த பெருமக்கள் கிளர்ச்சிகளில், முன் என்றுமில்லாதபடி பொதுமக்கள் பெருமக்களுக்கு ஆதரவு தந்தனர். இதன் பயனாக கொடுங்கோலானாகிய ஜான் அரசனிடமிருந்து ஆங்கிலம் பெருமக்கள் ஸ்டீபன் லாங்டன் என்ற சமயப் பெருந்தலைவன் (Archbishop) தலைமையில் நின்று அரசியலுரிமைத்தாள் ஒன்று எழுதி வாங்கினர். இது முதலாம்