பக்கம் எண் :

குடியாட்சி65

ஹென்ரியும் இரண்டாம் ஹென்றியும் தந்த உரிமைத்தாள்களைப் போன்றதேயாயினும் அவற்றைப்போல் அரசன் விருப்பப்படி தந்ததாக இராமல் மக்கள் விருப்பத்தின் பேரில் அவனிடமிருந்து பெறப்பட்டதாதலால் மக்கள் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முதல் வெற்றியாமைந்தது. எனவே வரலாற்றில் அது பேருரிமைத்தாள் (Magna carra or the great charter) எனப்பெயர் பெற்றிருக்கிறது. அதிற்கண்ட தலைமையான செய்திகள் மன்னன், பெருமக்கள் (Barons), தலைமக்கள் (Clergy) பொதுமக்கள் (Commons) ஆகியவர் இணக்கிமின்றிப் புதுவரி சுமத்தப் படாதென்பதும், மன்னன் உரிமைத்தாளைப் பேணி அரசாளுகின்றானா என்று மேற்பார்வையிடப் பதினைவர் அடங்கிய ஒரு குழு இருத்தல் வேண்டும் என்பதுமே. இவற்றுள் முன்னது ஏட்டில் எழுத்தாகவே பெறப்பட்டது. அதிற்கண்ட உரிமைகளைச் செயல்முறையிலேயே பெறுவதற்கு உண்மையில் பல நூற்றாண்டுகள் போராட வேண்டி வந்தது. பின்னதோ சில ஆண்டுகளில் மீறப்பட்டுவிட்டது. வெளித்தோற்றத்தில் இவ்வகையாகப் பேருரிமைத்தாள் பயன்தராதது போல் தோற்றினும் உண்மையில் அரசியல் போராட்டத்தில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டி ஒரு முன்மாதிரியையும் ஒரு போர் முறையையும் எடுத்துக் காட்டிற்று. இக்காரணத்தால் இஃது ஒரு பெரு நிகழ்ச்சியே என்று கொள்ளத் தக்கதாகும்.

   ஆங்கில அரசியலாகிய முக்காலிக்குப் பேருரிமைத் தாள் (Magna Carta, 1216 ) உரிமைப்பகர்ப்பு (Bill of Rights, 1628) உரிமைக் கோரிக்கை (Petition of Rights 1688) ஆகிய மூன்றுமே மூன்று கால்கள்