பக்கம் எண் :

மொழி61

Studies) என்னும் நூலாசிரியர் எம். சீனிவாச ஐயங்கார் அவர்கள்.

3. கன்னடம்

முதன் முதல் இம்மொழியில் நூல்கள் எழுதத் தொடங்கியவர்கள் சமணர்கள். இவர்கள் சேழாபால சரித்திரம் முதலிய சரித்திரங்களையும், பிரபோதசந்திரோதயம் முதலிய தத்துவ நூல்களையும், ஜினமுனி தயை முதலிய சமணக்கொள்கைகளை விளக்கும் சில நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். சப்தமணிதர்ப்பணம் என்ற இம்மொழியின் பிரதான இலக்கணநூல் இவர்களில் ஒருவரான கேசிராசாவா லியற்றப்பட்டது. பிறகு வீரசைவ மதத்தோரால் வசவபுராணம், பிரபுலிங்கலீலை, இராசசேகர விலாசம் முதலிய பல காவியங்களும் சரித்திரங்களும் இம்மொழியில் எழுதப்பட்டன. இவற்றுள் இராசசேகர விலாசம் என்பது இராசசேகரன் என்ற சோழன் சரித்திரம். இம் மொழியின் கவி சிரேட்டரான ஷடாக்ஷரி தேவராலியற்றப்பட்ட பல சைவ வைணவ கிரந்தங்களும் இம்மொழியில் உண்டு.
கன்னடமும் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானும் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ `பழங் கன்னடம்ழு என்றும் `புதுக் கன்னடம்ழு என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங், கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறும் கன்னடப் புலவர் இன்றுமுளர்.ழு
1கன்னடம் திராவிட இனத்தைச் சேர்ந்த ஒருமொழி. அது ஒருகோடி தென்னிந்திய மக்களாற் பேசப்படுகின்

      1. ழுKanarese, language of Dravidian family spoken by about ten millions of people in South India chiefly in Mysore, Hyderabad and the adjoining districts of Madras and Bombay. It has an ancient literature written in an alphabet closely resembling that employed for Telugu. since the 12th century the Kanarese speaking people have