பக்கம் எண் :

62தமிழகம்

றது. அது வழங்குமிடங்கள் சிறப்பாக மைசூர், ஐதராபாத்து, பம்பாய், சென்னை மாகாணங்களைச் சேர்ந்த சில பகுதிகள் என்பன. தெலுங்கு எழுத்துக்களைப் போன்ற ஒருவகை எழுத்தில் எழுதப்பட்ட இலகியங்கள், இம்மொழிக்கு உண்டு. கி. பி. 12 ஆம் நூற்றாண்டுமுதல் கன்னட மக்கள் இலிங்க மதத்தைத் (வீரசைவம்) தழுவியுள்ளனர். இம்மதம் பிராமணத்துக்கு எதிராக எழுந்தது. இவர்களிற் பெரும்பாலோர் பயிர்த்தொழிலும் வியாபாரமும் புரிவர்.

-கலைப்பேரகராதி

1தெலுங்கு கி. பி. 7 ஆம் நூற்றாண்டுக்குமுன் இலக்கியவளம் பெறவில்லை. அதன் இலக்கியங்கள் சமக்கிருதத்தை முற்றாகப் பின்பற்றியனவாகக் காணப்படுகின்றன கன்னடத்தில் பழைய இலக்கியங்கள் உண்டு. நீர்பதுங்கு என்பவராற் செய்யப்பட்ட கவிராசமார்க்க என்னும் நூல் தீர்மானமாகக் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. மலையாளம் கிறித்துவ ஆண்டுகளின் முற்பகுதியிற் தமிழிலிருந்து பிறந்ததாகத் தோன்றுகின்றது.

 -பேராசிரியர். எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்.

4. துளு

2துளு அல்லது துளுவம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்தது. இது சென்னை மாகாணத்தைச் சேர்ந்த

      largely adopted the Lingayat form of faith which may be described as an anti-Brahmanical sect of Siva worshippers; most of them are agriculturists, but they also engage actively in trade. - Encylopaedea Britannica.
      1. "Telugu does not take its available literature much anterior to the eleventh century A.D., and this literature seems to be modelled upon Sanskrit entirely. Kanarese has certainly a more ancient literature. A work of the 9th century undoubtedly is the Kaviraja marga of Nirpatunga. Malayalam seems to have grown out of Tamil in the early centuries of the Christian era." - Prof. S. Krishnaswami Aiyangar.
      2. Tulu or Tuluva, a language of the Dravidian family found chiefly in the South Kanara District of Madras. It