பக்கம் எண் :

மொழி63

தென் கன்னடப்பிரிவில் பெரும்பாலும் வழங்குகின்றது. இதற்கு இலக்கியங்கள் இல்லை. மக்கள் இம் மொழியைப் பெரும்பாலும் வழங்கும் நாட்டில்தானும் இது அரசாங்க சம்பந்தமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 1901 இல் துளுமொழி வழங்குவோரின் எண் ஐந்து லட்சமாயிருந்தது.
பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரத்தில் துளுவம் பதினெண்பாடையில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. ஆகவே, துளு பதினோராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மொழியாதல் வேண்டும்.

5. மணிப்பிரவாளம்

இது சமக்கிருதமும் தமிழும் சரிக்குச் சரி கலந்த நடை
உதாரணம்:- "பும்ஸ்பர்சக்லேச ஸம்பாவனா கந்த விதுரமாய ப்ரத்யக்ஷாதிரரமாண விலக்ஷணமா யிருந்துள்ள நிகில வேதஜாதத்துக்கும் வேதோப ப்ரம்மணங்களான ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களுக்கும் க்ருதயம் ஸகல ஸம்சாரி சேதனர்க்கு தத்வஞானத்தை ஜனிப்பிக்கை. (தத்துவசேகரம்)

6. சிங்களம்

இதனைச் சிங்க-எல்லம் எனப் பிரிக்கலாம். சிங்க வமிசத்தவனாகிய கலிங்க அரசன், விசயனென்பான் இலங்கையை ஆளத்தொடங்கியபின், முன் எல்லம் என வழங்கிய இலங்கைத்தீவின் பெயர் சிங்க எல்ல மாயிற்று. சிங்க எல்லம் பின்பு திரிந்து சிங்களம் ஆயிற்று. பின்பு நாட்டின் பெயரால் மொழியும் அறியப்பட்டது. 1இச் சிங்களமொழி

       has no literature, nor it has been adopted for official use even where it is spoken by the majority of the population. In 1901 the total number of speaker so Tulu exceeded half a million." - Encylopaedea Britannica.
       1. Singhalese is essentially, Dravidian language. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that, while in regard to its word