பக்கம் எண் :

64தமிழகம்

யும் தமிழின் திரிபேயாகும். சிங்கள மொழியில் பாலிச் சொற்களும் சமக்கிருதச் சொற்களும் பல கலந்துள்ளன. இம்மொழியின் இலக்கண அமைப்பும், வசனக்கட்டும் பிறவும் தமிழை ஒத்துள்ளன. இம்மொழியில் கி. பி. 10 ஆம் நூற்றாண்டளவில் லீலாவதி என்னும் அரசி காலத்தில் முதன் முதல் சிங்கள மொழியில் இலக்கியம் எழுதப்பட்டது. இலங்கையை ஆண்ட அரசர் பெரும்பாலும் தமிழ் மரபிலுள்ளோர். சேர். பி. அருணாசலம் அவர்கள் சிங்கள அரசரின் அரண்மனைமொழி தமிழ் என ஆராய்ந்து கூறியுள்ளார்.

3 தமிழ்நாட்டின் எல்லை

முற்காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகள் வேங்கடமலையும் குமரியாறாகவும், கிழக்கும் மேற்கும் கடலாகவும் இருந்தன.
"வடவேங்கடந் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
எனப் பனம்பாரனாரும்,
"வேங்கடங் குமரிதீம்புனற் பௌவமென்
றின்னான் கெல்லை தமிழது வழக்கே"
எனச் சிகண்டியாரும்,
"குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்"
என இளங்கோவடிகளும் தமிழ்நாட்டின் பழைய வெல்லையைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

       development, Singhalese is the child of pali and Sanskrit; it is with regard to its physical features and structure essentially the daughter of Tamil with regard to the laws governing the relation of words in a sentence, viz., the laws of syntax, including idioms we find great many laws which cannot be explained except in the principle of Tamil grammar.

 -Muadaliar W. F. Gunawardhana.