பக்கம் எண் :

76தமிழகம்

தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள்

"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்."

(வில்லிபாரதம்)

"கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ"
"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்டபாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்"

 (திருவிளையாடற் புராணம்)

"தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
தடாதகாதேவி யென் றொருபேர்
தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
சவுந்தர மாறனா னதுவுங்
குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர்
கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக்
கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்."

(மதுரைக் கலம்பகம்)

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்" 

(தண்டி--உரை--மேற்கோள்)

"வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ்
சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வைகை யாறுஞ்
சோலையாண் பனையும் வேதக் கதவமும் தொழும்பு கொண்ட
வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி.................."

(திருக்குற்றாலத் தலபுராணம்)