பக்கம் எண் :

மொழி77

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

(மனோண்மணீயம்)

     இவ்வகைப் பாடல்கள் எழுதற்குரிய காரணங்கள்
     தாசுக்கள், ஆரியர் எனப்படும் மக்களுக்கிடையே நடந்த யுத்தங்களைப்பற்றி வேதபாடல்கள் கூறுகின்றன. தாசுக்கள் எனப்பட்டோர் தமிழர். இவ்வுணர்ச்சியின் வேகம் நீண்டகாலம் இருந்து வந்தது. இதனால் தமிழை ஆரியத்தினும் தாழ்ந்ததாகக்கூறும் கட்சியொன்று தமிழ் நாட்டில் நீண்டகாலந்தொட்டு இருந்து வருவதாயிற்று. சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சி யிருந்தமையினாலேயே இரு கட்சியினரையும் சந்து செய்தற்பொருட்டுத் தேவாரத்தில் `ஆரியன் கண்டாய்ழு தமிழன் கண்டாய்ழு எனக் கூறப்பட்டுள்ளது.
     தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்குநாள் வளர்வதாயிற்று. அதில்பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமையாமையையும் அறியாது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே `தேவபாடையின் இக்கதை செய்தவர்ழு எனக் கூறி வடமொழிக்குப் பணிகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞானமுனிவர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானோர் அம்மக்களின் அறியாமைக்கு இரங்கி, அவர்கள் மனங்கொண்டு தமிழில் பற்று உண்டாமாறு அதன் பெருமையை உரைத்து வந்தனர். இம்மாறுபட்ட உணர்ச்சி இன்றும் முற்றாக அவிந்துவிடவில்லை. நீறுபூத்த நெருப்புப்போல் அடங்கிக்கிடக்கின்றது எனலாம்.
     தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (தொல்-பொருள் 490)