பக்கம் எண் :

80தமிழகம்

தான் வட்டெழுத்து அல்லது பழைய தமிழெழுத்து. எழுத்துக்கள் எழுதப்பட்ட வடிவிலிருந்து அவைக்கு வட்டெழுத்து என்னும் பெயர் வழங்கப்பட்டது.
     "இச் சாசனத்தின் காலம் கி. பி. 770. கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் வழங்கிய எழுத்து இதுவேயாகும். கிறித்துவுக்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்துடன் வேறு வகையான எழுத்துக்களையுங் கலந்து எழுதப்பட்ட சாசனங்கள் காணப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுள் வட்டெழுத்தின் இடத்தைப் புதிய எழுத்து எடுத்துக்கொண்டது. ஆரியருடைய சமயமும் சாத்திரங்களும் தென்னாட்டில் பரவத் தொடங்கிய ஏதுவினால் சமக்கிருதச் சொற்கள் பல தமிழிற் கலக்க நேர்ந்ததே இதற்குக் காரணம். இப்போதைய வடிவத்தைத் தமிழ் எழுத்துக்கள் பதினாலாம் நூற்றாண்டில் அடைந்தன." (Dr. Chandler)
     இப்போது வழங்குகின்ற கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்தினின்றும் தோன்றியனவேயாம்.
     போர்முனையில் இறந்த வீரனுக்குக் கல்நட்டு அதில் அவனுடைய பெயரும் பீடும் எழுதுவது பழந் தமிழர் வழக்கு. இதனை
"நல்லமர் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தோறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்"

(அகம்)

"பட்டோர் பெயரு மாற்றலு மெழுதி
நட்ட கல்லு மூதூர் நத்தமும்"

(திருவாரூர் மும்மணிக்கோவை)

     என வருவனவற்றா லறிக. இவ் வீரக்கல் நிறுத்தும் வழக்கம் பழந் தமிழர்கள் எழுத்தெழுதும் முறையினை அறிந்திருந்தார்கள் என்பதை வலியுறுத்துகின்றது.
     தமிழ்மொழியில் நெடுங்கணக்கு மிகவும் அழகு பெற அமைந்துள்ளது. ஒரே எழுத்துக்குப் பல ஒலியில்லை. ஓரொலிக்குப் பல எழுத்துக்கள் வேண்டா; கூட்டெழுத்