பக்கம் எண் :

மொழி79

     இற்றைக்கு ஆயிர வருடங்களுக்குமுன் வழங்கிய எழுத்துக்கள் இன்றுவழங்கும் எழுத்துக்களைப் போன்றனவல்ல. கி. பி. பதினாலாம் நூற்றாண்டுவரையில் அவ்வெழுத்துக்கள் திரிபடைந்து வந்தனவாகத் தெரிகின்றன. இதனை "உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்குபெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும் புள்ளியுங்கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி-கீ முதலியன மேல் விலங்கு பெற்றன. கு-கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ-கே முதலியன கோடு பெற்றன. கா-ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்து எழுதினார். கொ, கோ, ஙொ, ஙோ முதலியன புள்ளியுங்கோடும் உடன்பெற்றன என்னும் நச்சினார்க்கினியர் உரையால் அரியலாகும். முற்காலத்துத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் எழுதப்பட்டது வட்டெழுத்திலேயாம். பழைய வட்டெழுத்து கோலெழுத்து என்னும் பெயருடன் மலையாளத்தில் மிகச் சமீப காலத்தில் வழங்கியுள்ளது. அங்கு இது கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் வழங்கிற்று. மலையாளத்தில் மாப்பிள்ளைமார் கோலெழுத்தை இன்றைக்கும் வழங்குகின்றனர் என்ப.1
     திருவனந்தபுரத்திலுள்ள நூதனசாலையில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சில சாசனங்களால் தமிழ் வட்டெழுத்து கி. பி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையும் வழங்கியதாகத் தெரிகிறது.
     "அக்காலத்திலே வழங்கிய தமிழ் எழுத்துக்கள் இக்காலம் வழங்கும் எழுத்துக்களைப் போன்றனவல்ல. மதுரைக்கு வடகிழக்கே 9-மைலுக்கப்பால் இரண்டு மைல் தொடர்ச்சியுள்ள ஆனைமலை யென்னும் ஒரு மலைத்தொடருள்ளது. அம்மலையின் மேற்குப்பக்கத்தில் ஒரு குகை யிருக்கின்றது. அக்குகையின் சுவரில் பழைய தமிழெழுத்து வெட்டப்பட்ட சாசனமொன்று காணப்படுகின்றது. இது

     1. Tamil Studies H. P. 120.