| பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலனணிந்து முத்தீ முன்னர்க் கொடுப்பது" என உரையாசிரியர்கள் கூறுவர். நாற்பத்தெட்டியாண்டுப் பிராயத்தானுக்குப் பன்னீராட்டைப் பெண்ணை மணமுடிப்பது தகுதியான மணமுறையாகக் காணப்படவில்லை. இம் மணத்தைப்பற்றிக் கூறும் பழைய பாடல் நாற்பத்தெட்டியாண்டு பிரமசாரியங்காத்தல் முதலியவற்றைப்பற்றி யாதும் கூறாமையால், அப்பொருந்தா மணமுறை ஆரிய நாட்டார் வழக்கேயாகும். இம்முறையினையே அவர்கள் தமிழ்நாட்டு அறநிலை வழக்கோடு ஒப்பவைத்துப் பிரமம் என்னும் பெயரால் வழங்கினார்கள் போலும். |
| ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, கொடுத்த பரியத்தின் இருமடங்கு மகட் கொடுப்போன் கொடுத்தல். என்னை? |
"கொடுத்த பொருள் வாங்கிக் கொண்டபேர் மடுப்பர் மடுத்தற் கமைந்தா--லடுப்போ னிரண்டா மடங்கு பெய்தீவ ததுவே யிரண்டா மணத்தி னியல்பு" | |
| என்றாராகலின். |
| பொருள் கோள் (ஆரிடம்) ஆவது; "ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர்பெய்து கொடுத்தல். என்னை? |
"இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலேறாப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து--முற்படுத்து வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை ஆரிடம் பேரா மதற்கு" | |
| என்றாராகலின். |
| தெய்வம் ஆவது; வேள்வி ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகலனணிந்து அவ்வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது, என்னை? |