பக்கம் எண் :

92தமிழகம்

"தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை
மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலின்"

(சிந்தாமணி)

     என்ற பரிபாடல் சிந்தாமணி என்னும் பழந்தமிழ்ப் பனுவல்களினின்றும் காட்டப்பட்ட அடிகள் பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கே சொந்தம் என்பதை வலியுறுத்தும்.

3. எண்வகை மணம்

     "மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்" (தொல். கள. க) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அக்காலத்து வடநாட்டில் வழங்கிய மணமுறைகள் எட்டு என அறிகின்றோம்.1

"அறநிலை யொப்ப பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்ட மரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய
மறையோர் மன்ற லெட்டிவை"
     என்னும் இறையனா ரகப்பொருளுரை மேற்கோளால் அம்மன்றல்கள் எட்டின் பெயர்கள் புலனாகின்றன. இம் மணமுறைகள் உலக மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டவை.
     (1) அறநிலை (பிரமம்) யாவது; ஓரிருது கண்ட கன்னியை மற்றையிருது காணாமே கொளற்பால மரபினோர்க்கு நீர் பெய்து கொடுத்தல். என்னை?
"ஒப்பாருக் கொப்பா ரொருபூப் பிரிந்தபின்
இன்பான் மதிதோன்றா வெல்லைக்க-ணப்பாற்
றருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல்
பிரமமாம் போலும் பெயர்"
     என்றாராகலின்.
     "பிரமமாவது ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தானுக்குப் பூப்பெய்திய

     1. மறையோர் என்பது ஈண்டு வடநாட்டுப் பிராமணரைக் குறிக்கின்றது.