அவனுக்குப் பின் அவன் மனைவி மீனாட்சி சரிந்துவிழும் தமிழக ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த அரும்பாடுபட்டாள். ஆனால் அது பயன்படாமல் போயிற்று. | 1736-ல் மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்றது. | மேனாட்டவர் கைவரிசைகள் | 17ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சிந்து கங்கை சமவெளி முழுவதையும் தில்லியிலிருந்து ஆண்ட முகலாயப் பேரரசர் தென் னாட்டிலும் தம் ஆட்சியைப் பரப்பத் தலைப்பட்டனர். பாமனிப் பேரரசு சிதறுண்டபின் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அகமது நகரும் பீடாரும் பீராரும் அவர்கள் ஆட்சியுட்பட்டன. விசயநகரை விழுங்கி முன்னேறிய பீஜப்பூரும் கோல்கொண்டாவும் அந்நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசினால் விழுங்கப்பட்டன. ஆனால் தெற்கே முன்னேற முன்னேற, தில்லிப் பேரரசின் வலு தளர்ந்தது. படைத்தலைவர்கள் தாமே தனியரசராகப் பேரரசின் பெயரை வைத்துக் கொண்டு ஆளத்தலைப்பட்டனர். முகலாயப் பேரரசருடன் போட்டியிட்டு, தென்னாட்டு முசல்மான் அரசரின் அமைச்சராகவும் படைத்தலைவராகவும் இருந்துகொண்டே, சிவாஜியின் மரபினரான மகாராஷ்டிர வீரரும் தமிழகத்தில் தனியரசுகள் நாட்டினர். அழிந்து வரும் நாயக்க மரபினர், முன்னேறிவரும் முசல்மான் படைவீரர், தலைவர் ஆகியவர்களுக்கிடையே, வாணிகங் காரணமாகக் கடற்கரைகளில் சிறு கோட்டைத்தளங்களுடன் வாழ்ந்த மேனாட்டு வெள்ளையரும் தம் ஆற்றலைப் பரப்பினர். | விசயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலேயே போர்ச்சுக்கீசியர் கோவாவில் இறங்கி, கள்ளிக்கோட்டை சாமூதிரி அரசரிடமும், கிருஷ்ண தேவராயரிடமும், கொச்சி அரசரிடமும், பட்டயங்கள் பெற்றனர். கொச்சியிலும் சென்னைக் கரையிலும் இருந்து சிறிது பழங்காலக் கிறிஸ்தவக் குழுக்களை அவர்கள் பெருக்கிப் புதிய ஆதரவு தேடினர். போர்ச்சுக்கீசியரைப் பின்பற்றி 16-ம் நூற்றாண்டில் | | |
|
|