கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற உரோம யவன வாணிகம் கி.மு. முதலாம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்தது. வாணிக வளர்ச்சி கருதி கி.மு.20 கி.பி. 107, 138, 336 ஆகிய ஆண்டுகளில் பாண்டியன் உரோமப் பேரரசிடம் அரசியல் தூதர் அனுப்பியதாக அறிகிறோம். கி.மு.20-ல் ஒரு தூது, மெய்க்காப்பாளர் படைக்கு வீரர் தருவிப்பதற்காக யவனப் படைத் தலைவரிடம் அனுப்பப்பட்டிருந்தது. | கிரேக்க உரோமருடன் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிய பல விரிவான குறிப்புகளை டாலமி என்ற எகிப்திய நில நூலாசிரியரும், பிளினி என்ற உரோம வரலாற்றாசிரியரும் பிறரும் தந்துள்ளனர். உரோம மன்னர், உயர்குடிமக்கள், பெண்மணிகள் ஆடை அணி மணி இனப்பொருள்களுக்காகச் செலவு செய்த பொன்னால், உரோம உலகு வறுமையுற்றும், தமிழகம் வளமுற்றும் வந்தது கண்டு பிளினி அங்கலாய்த்துக் கொண்டார். ஆண்டுதோறும் சீன, தென்னாடு, அராபியா ஆகிய நாடுகளுக்கு உரோமர் வாணிகத்துக்காக அனுப்பிய 100 கோடி *செஸ்டாஸ்களில் பாதி தென்னாட்டுக்குச் சென்றதாக அவர் கணித்தார். இதற்கேற்ப, கிட்டத்தட்ட எல்லாப் பேரரசர் கால நாணயங்களையும் புதைபொருளாராய்ச்சியாளர் தென்னாட்டில் ஏராளமாகக் கண்டெடுத்துள்ளனர். உரோம நாட்டில் அடித்த நாணயங்களில் பெரும்பகுதி தமிழகத்திலேயே வந்து நிலையாகத் தங்கிற்று என்பதை இது காட்டுகிறது. | கீழ்திசைத் தொடர்பு | கி.மு.6-ஆம் நூற்றாண்டில் இலங்கையின் முதல் அரசனான விசயன், பாண்டியன் மகளை மணம் புரிந்து கொண்டான். பாண்டிய இளவரசி சென்ற கப்பலில் யானைகள், தேர்கள், அரசியற் பணியாளர்கள், பதினெண் தொழிற் குழுக்களுக்குரிய |
| * அந்நாளைய உரோம் நாணயங்கள் | | |
|
|