பெருந்தேவிக்கும் மகனாவான் என்று கூறப்பட்டுள்ளது. தன்னைப் பாடிய கபிலர் பெருமானுக்கு அவன் நூறாயிரம் காணமும், நன்றா மலையிலிருந்து காணும் நாடும் தந்தான். | எட்டாம் பத்திற்குரிய தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை அரிசில் கிழாரால் பாடப் பெற்று, அவருக்கு 9 நூறாயிரம் காணமும் அரண்மனையும் ஈந்து அவரைத் தன் அமைச்சனாகப் பெற்றன். இவன் ஆயர்தலைவன் கழுவுளை அடக்கினான். இவன் ஆண்டது 7 ஆண்டுகள். அடுத்த அரசன் இளஞ்சேரலிரும்பொறை சோழ பாண்டியரையும் விச்சிக்கோவையும், பொத்தப்பிச் சோழரையும், பழயன் மாறனையும் வென்றான். தன் மாமனாகிய மய்யூரிகிழானையே அவன் தன் ஆயத்துறை அமைச்சனாகக் கொண்டான். தன்னைப்பாடிய பெருங்குன்றூர்கிழாருக்கு அவன் 32 ஆயிரம் பொன்னும், காப்புவரி தள்ளப்பட்ட நிலங்களும் ஈந்தான். | பத்தாம்பத்து நமக்குக் கிட்டவில்லையாயினும், அவன் கடைச் சங்கச் சேரரில் கடைசியானவன் என்னலாம். அவ்வையாரால் சோழ பாண்டியன் ஒருங்கே பாடப்பட்ட சேரமான் மாவெண்கோவே என்று அறிகிறோம். | வேளிர் | தமிழகத்திலும் தமிழகத்துக்கு அப்பாலும் கடைச் சங்க காலத்துக்கு முன்னிருந்தே எண்ணற்ற முடியுரிமையற்ற சிற்றரசர் அல்லது வேளிர் இருந்தனர். இவர்களில் சிலர் மூவரசருக்கு உட்பட்டும் பலர் உட்படாதும் வாழ்ந்தனர். மூவரசருக்கு உட்படாது தனியாட்சி உடையவருள் தமிழகத்தில் ஏறைக் கோன், ஓரி, கடியநெடுவேட்டுவன் குமணன், தழும்பன், தாமன் தோன்றிக்கோன், திதியன், நள்ளி, நாஞ்சில் வள்ளுவன், பழயன், பாரி, மல்லிகிழான், காரி, மூவன், பண்ணன், வெளிமான், வேங்கை மார்பன், தொண்டைமான் ஆகியோர் முக்கியமானவர். தமிழக எல்லையிலும் அப்பாலும் வேங்கடமலை புல்லி, | | |
|
|