குண்டோதர ராயன்:- "ஏன் அந்த வீரவர்மன் நம்மீது படையெடுத்து வரப்போகிறான்? அதை முதலாவது சொல்லு" என்று உறுமினான். அப்போது விருத்திமதி;- "தங்களுடைய சிப்பாய்கள் வீரவர்மனுடைய தாய்க்குச் சமானமான செவிலித்தாயைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள்! இந்த விஷயம் அவன் கேட்டால், க்ஷணம் கூட பொறுக்கமாட்டான். யுத்தம் வருவது நிச்சயம்" என்று சொன்னாள். இது கேட்ட குண்டோதர சிங்க மகா சிங்கராயன் "எனது சிப்பாய்களால் கைதி செய்யப்பட்ட வீரவர்மனுடைய செவிலித்தாயின் நாமம் யாது?" என்று வினவினான். "நரிச்சி நல்ல தங்கையம்மன்" என்று விருத்திமதி சொன்னாள். இதைக் கேட்ட குண்டோதர சிங்கராய மகாசிங்கன் கடகட கட கடகட கட வென்று சிரிக்க ஆரம்பித்தான். |