பக்கம் எண் :

செய்கை

நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களை யெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி; இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லை யென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்து கொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்நியைப் போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்த சக்திகளைக் கொண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிட முடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்? தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன் பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல் போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா!

"வில்லினை யெடடா - கையில
      வில்லினை யெடடா - அந்தப்
      புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!
      வாடி நில்லாதே - மனம்
      வாடி நில்லாதே - வெறும்
      பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே!
      ஒன்றுள துண்மை - என்றும்
      ஒன்றுள துண்மை - அதைக்
      கொன்றி டொணாது குறைத்தலொண்ணாது
      ! துன்பமுமில்லை - கொடுந்
      துன்பமுமில்லை - அதில்
      இன்பமுமில்லை பிற பிறப் பில்லை!
      படைகளுந் தீண்டா - அதைப்