நிலத்திலே முளைத்தவளே, நீலப்பூ பூத்தவளே, மனத்துக் கவலை தீர்த்தவளே, மன்னன் சிறை மீட்டவளே, குடத்துத் தண்ணீர் பாலாகவேண்டும். கோவிந்தராஜு என்னைக்கண்டா கும்பிட வேண்டும். நான் ஒரு புலியாக வேணும். அவன் ஒரு பசுவாக வேணும். புலியைக் கண்ட பசு நடுங்கினாற் போல் நடுங்கி ஒடுங்கி வணங்கி நிற்க ஸ்வாஹா! இந்த மந்திரத்தை ஆயிரம் உரு ஏற்றவேண்டும். வேளைச் செடியின் வடக்கே போகிற வேரில் ஞாயிற்றுக்கிழமை சூரியன் கிளம்புகிற சமயத்தில் மஞ்சள் துண்டைக் கட்டிப் பதினாறு விசை மந்திரத்தை ஜபித்து பிறகு வேர் அறாமல் பிடுங்கி வெள்ளித் தாயித்தில் மஞ்சளை நீக்கி வேரைச் செலுத்திக் கட்டிக்கொள்ள வேண்டும். |