பக்கம் எண் :

குழந்தைக் கதை

"அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய வில்ஸன் பண்டிதர் நேசக் கக்ஷியாரின் யுத்த லக்ஷ்யங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்?" என்று கேட்டேன்.

"லார்ட் கர்ஸன் என்ன சொல்லுகிறார்?" என்று அக்குழந்தை என்னிடம் கேட்டது. அப்போது அக் குழந்தையின் தாய் புல்லாங்குழலைப் போன்ற குரலில் "பச்சை குழந்தையிடம் தொளைத்துத் தொளைத்துக் கேள்விகள் கேட்டால் அதற்கென்ன தெரியும்? அதன் பிதா அதை மித மிஞ்சிப் புகழ்ந்து பேசினார். அதை நம்பாதேயுங்கள். நித்திய கல்யாணி, நீ போய் பாடம் வாசி" என்றாள். குழந்தை புன்னகையுடன் குதித்தெழுந்து பாடம் படிக்கப் போய் விட்டது. இதற்குள் மழையும் நின்று விட்டது. நானும் பின்னுமொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டேன். அப்பால் மேற்படி கங்காதர சாஸ்திரியிடமும், அவர் மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன். மேற்படி குழந்தையின் விஷயமாக அதன் தாய் சொல்லியவார்த்தை மெய்யில்லை யென்றும், தந்தை சொல்லியதே சரியென்றும், என் மனம் உறுதியாய்க் கருதலாயிற்று. எனினும் ஜனாதிபதி வில்ஸனைக் காட்டிலும் லார்ட் கர்ஸன் விஷயத்தில் அக் குழந்தைக்கு அதிக மதிப்பேற்பட்டிருப்பதை எண்ணுமிடத்தே எனக்கு வியப்புண்டாகிறது.