"என்ன உதவி?" என்று கேட்டேன். "பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற சகாயம் செய்ய வேண்டும்" என்றாள். "செய்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தேன். அப்போது அந்த மிளகாய்ப் பழச் சாமியார் பின்வருமாறு உபந்நியாசம் புரிந்தாள். ஹா, ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் போதுமடா, போதுமடா, போதும்! உலகத்திலே நியாயக் காலம் திரும்புவதாம். ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய்விட்டதாம். ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம். உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக் கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை. பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதை யெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன். எவனும் தனது சொந்த ஸ்திரீயை அலக்ஷ்யம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டு வருவது மேல் தொழில் என்றும், |