பக்கம் எண் :

மாதர் - பதிவிரதை

ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான்வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும்பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன.சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும்கொடுமையும் செய்து பயனில்லை!

இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம்செலுத்தவில்லை?''என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன?இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும்வேறே கிடையாது.

ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாகஇருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலேஉண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று"நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர்நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும்,திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்குவலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவைசெய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?

தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசுசெலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யாவிட்டால்,சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள்.அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள்அவமதிக்கிறார்கள

அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர்"செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கைநெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி,என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை.அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்யஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளேதுரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.