பக்கம் எண் :

மாதர் - பதிவிரதை

இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள்பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத்தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான்,இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள்இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்றுஎல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால்,ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாகஇருக்கவேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ,அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே"காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்துஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.

ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாகஇருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும்சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்துமீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது.ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயைவதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளிஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல்கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.

அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால்ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக்கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில்லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம்ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம்அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில்இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு"நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல்அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன்வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்குமாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது.தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.