பக்கம் எண் :

மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை

அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள்ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸபையின்கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும்தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள்தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ்சொல்லுகிறார்.

அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகியஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒருபாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப்பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப்பயிற்சிக்கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம்"படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.

இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில்இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள்ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக்கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படிசிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக்கீழ்க் கரைக்கு  மஞ்சுப்படை  வந்து  விட்டதெனஇவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில்மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள்அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்திஇவளைத் தப்பியோடும்படி சொல்லினர். இவள் மறுமொழிகூறவில்லை. மஞ்சுப்படை கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்குதைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர்புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர்.ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டுவாயிலில் நின்ற தளத்தின்மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காதஇச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்து"விட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர்பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர்.மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில்வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னேசியூசீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோதுஉடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றகருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.

'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.

இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.

அப்பால் இவளுக்குக் கொலை என்பது தண்டனைவிதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங் ஸிங் நகர மண்டபத்தருகேதூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய"மேகமொன்று இவள் தலையின்மீதே வானத்தில் பறந்ததென்றும்,குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்துநின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால்சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச்சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.