பக்கம் எண் :

மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை

சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம்வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும்சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன்கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப்பொருந்தவில்லை. யாதலால், இவள் பாக்ஸர்,கலகத்திற்குப்பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள்தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்துவந்துவிட்டாள்.

இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த"பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம்கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்துபோய்விட்டாள்.

பின்பு ''ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகிவாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடையஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டுஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால்,இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்குசீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள்பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல்நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால்ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக்களத்திற்கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியைஅவனுக்குக் கொடுத்தனுபி விட்டாள்.

மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம்வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக்கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோநகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில்கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின்ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும்"அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சுராஜ்யவம்சத்தை ஒழித்துவிடவேண்டு மென்ற கருத்துடன்இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள்ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். சீனாவில்இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.

1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள்தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறுசீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம்ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில்சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில்டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன்என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன்பழக்கம் பெற்றாள்.

அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில்ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப்போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒருபெண் பள்ளிக்கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள்.