பக்கம் எண் :

கலைகள் -  தம்பூர்

நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளிலும் பஜனைக்கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம் பேரிரைச்சல்போடுவதிலே பாட்டின் சத்தம் கணீரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும் சுருதி மேலாகவும் நிற்கிறது. அஸாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்குமேலே பாடக் கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்குஉதவியாக சுருதி ஒலிக்கவேண்டும். பாட்டை விழுங்கும் சுருதிபிரயோசனமில்லை. அது வெறும் மடமை.