பக்கம் எண் :

கலைகள் -  வீணை

வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழகவேண்டும். வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும். இந்தக்கருவியிலே தேர்ச்சியேற்பட்டால்அது தான் வாஸ்தவமான  சங்கீதத் தேர்ச்சி யாகும். பெண்கள்வீணை வாசிப்பதினால், நாட்டிலே ரஸப்பயிற்சியும் வாழ்க்கைநயமும் உண்டாகும். மைசூரிலும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, 'பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை'என்பது தெரியும். வீணை பழகினால் அதிலேயே நல்ல தாளஞானம் உண்டாய்விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும்.இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணை மிகவும்பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனதுகையில் வீணையை தரித்துக்கொண்டிருக்கிறாள். காளிதாஸ கவிபராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்"என்று தொடங்குகிறார்.