பக்கம் எண் :

கலைகள் -  பொய்த் தொண்டை

ஆணாயினும் பெண்ணாயினும் கள்ளத்தொண்டை வைத்துக்கொண்டு பாடலாகாது. தொண்டையைத் திறந்து பாடினால்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமாக குரலும்பெண்ணுக்கு ஸன்னமான குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை ஸன்னத்தை அதிகஸன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிறார்கள். வேறு சிலர்லஜ்ஜையினாலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிறார்கள்.இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலேலஜ்ஜைப்பட யாதொரு நியாயமுமில்லை.