பக்கம் எண் :

கலைகள் -  பெண்ணின் பாட்டு்

இதிலுள்ள வகுப்புக்கள்

இருபாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன், பெண்களுக்கு மாத்திரம் சிறப்பான பாட்டுக்களும் சந்தங்களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ் நாட்டு மாதர் பாடிக் கொண்டிருந்த "பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன.

ஆனால், ஜீவன் பெண்ணென்றும், பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள்காணப்படுகின்றன.

திருஷ்டாந்தமாக, திருவாசகத்திலே பின்வரும் வகைகள் காணலாம்.

 (1) எம்பாவை (பெண்கள் நீராடப்போவது). (2) அம்மானைப் பாட்டு. (3) தும்பி, குயில், கிளி முதலிய தூதுப் பாட்டுகள். (4) தெள்ளேணம் (நடுவே ஒரு பெரிய முரசை  வைத்துக்கொண்டு, பெண்கள்சுற்றியிருந்து இரண்டு  கைகளிலும் கோல் கொண்டு கொட்டி அந்தத் தாளத்திற்கு       இசையப்பாடுதல்.) (5) சுண்ணம் இடித்தல். சுண்ணமென்பது கந்தப் பொடி. (6) சாழல். (7) உந்தி. (இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று  தெளிவாகிறது. ஆனால் விளையாட்டின் விவரங்கள்  தெரியவில்லை.) (8) பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும்போது பாடுவது.) (9) தோணோக்கம் (பெண்கள் தோள் கோத்துப் பாடிக் குதிப்பது.) (10) ஊசல் (இதை இக்காலத்தில் "ஊஞ்சற் பாட்டு" என்கிறோம்.) (11) காலைத் துயில் எழுப்பும் பாட்டு