பக்கம் எண் :

கலைகள் -  அபிநயம்

"நைச்ய பாவம் அதிகமாகத் தோன்றும் கூத்தினாலே,ஒரு நாட்டார் அடிமை இயற்கை மிகுதியாக உடையவர்கள்என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால், கூத்தர் கூத்துகளில்அடிமைத் தோற்றத்தை மிதமிஞ்சிக் காட்டாதபடி நாட்டார் கவனித்துக் கொள்ளவேண்டும்.

"நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால்,அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப்பெண்மையும் உண்டாகும். அதை நெறி தவறிப் பயிற்சிசெய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண்ணுக்குஆண்மையும் விகாரமாகத்தோன்றும்.

"நாட்டிய சாஸ்திரத்தை ஆதியிற் பரமசிவன் நந்திக்குக்கற்றுக் கொடுத்தார். அப்போது, பகவான் நந்தியை நோக்கி,''கேளாய், நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தைஅடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளைஆசார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக்கொள்ள வேண்டும்.அடிமைகள் கூத்துப் பழகினால் அபிநய தர்மங்களைச் சிறிதேனும்தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக்கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திர விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிறார்கள்' என்று சொல்லி, மேலும்சொல்லுகிறார்:- ''தர்மிஷ்டனாகிய சிஷ்யன், நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக்கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் ஸமரஸப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும்,லக்ஷ்மீ கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தி யுடையவனாக இருக்க வேண்டும். தெய்வபக்தியினாலே ஸகல வித்தைகளும் வசப்படும்."

இங்ஙனம் மேற்படி ரஸபண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன்.

இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷமடைந்தவராய், "இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள். நான் எழுதிக்கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்" என்றார். "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்லி அந்தச் சுவடியை அவரிடம் கொடுத்தேன்.

அந்த சாஸ்திரத்தில், ''ரஸ ஞானத்திற்கு உபாஸனையே முக்ய ஸ்தானம், என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படுகிறது. அதன் பேரில், தாம் சில தினங்களின் முன்பு வேதநாயகர் கோயிலைப் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது இந்த ஊர்க்குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி, "ஓம் சக்தி" என்ற மஹாசக்தி மந்திரத்தைத் தமக்கு உபதேசம் செய்துவிட்டுப் போனதாகவும் அதிலிருந்து தாம் பராசக்தி உபாஸனை செய்து வருவதாகவும் சொன்னார்.

நான் மிகவும் சந்தோஷத்துடன், அவரை வண்டியேற்றிவழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் இன்னும் நம்முடைய புஸ்தகத்தை திரும்பக் கொடுத்தனுப்பவில்லை.