இருந்தாலும், பாகவதருடைய முகத்தில் காட்டும்அபிநயங்களைப் புகழ்ந்து சொல்லுதல் நம்முடைய கடமை.ஊடலை மாத்திரம் முகத்தில் தொண்ணூற்றொன்பது அபிநயங்களிற் காட்டுகிறார். இப்படி மற்ற வகுப்புக்களையும்சேர்த்தால் எத்தனைவித அபிநயங்களாகும்? நிறைய ஆகும்அல்லவா? கருணா ரஸத்தின் பாவம் சோகம் என்றுசொல்லப்படும். இதைக் காட்டுவதில் மேற்படி பாகவதருக்குத்தோடாப் பண்ணிப்போடத் தகும். இன்னும் ஒன்று, கடைசி.அதிலேதான் அந்த பாகவதர் முதல்தரமான வேலைசெய்கிறார். அதாவது, பயாநக ரஸத்தைப் பதினாயிரம்அபிநயங்களிற் காட்டுகிறார். இந்த ரஸத்திற்குப் பாவம் பயம்.மானுக்கும், முயலுக்கும், சில மனுஷ்யருக்கும் இயற்கையாகவுள்ள பயத்தை இவர் அபிநயத்தில் பூதக் கண்ணாடிபோலக் காட்டுகிறார். இந்த பாகவதர் சில தினங்களின்முன்பு என்னைப் பார்க்க வந்தார். "ஹாஸ்ய ரஸம், ரௌத்ரரஸம், வீரரஸம், அற்புதம், சாந்தம் என்ற "ஐந்து ரஸங்களையும் நீங்கள் தீண்டவேயில்லை. அதென்ன காரணம்?"என்று கேட்டேன். அந்த பாகவதர் சொல்லுகிறார்: "நான்என்ன செய்வேன்? நான் நாட்டிய சாஸ்திரம் படித்ததுகிடையாது. ஊரிலே கண்ட அபிநயங்களை நான் நடித்துக்காட்டுகிறேன். ஹிந்துக்களிலே அடிமைத் தனம் அதிகம்.ஆதலால், எனக்கு "நைச்ய பாவம்" என்ற அடிமைத் தோற்றம்காட்டுதல் மிகவும் ஸுலபமாக வருகிறது. வீர ரஸம் காட்டச்சொன்னால் எப்படிக் காட்டுவேன்? நான் பிறந்தது முதலாகஇன்றுவரை ஸஞ்சாரம் செய்து வந்திருக்கிற ஏழெட்டுஜில்லாக்களில் ஒரு வீரனைக்கூடப் பார்த்ததில்லை. வீரரஸத்திற்கு நான் எங்கே போவேன்?" என்று சொன்னார்.அப்போது நான் "ரஸபண்டாரம்" என்ற ஸம்ஸ்க்ருதசாஸ்திரத்திலிருந்து பின்வரும் பொருளுடைய சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். அந்த நூல்சொல்லுகிறது:- "லோக நடையினாலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப் படுத்துகிறார்கள். ரஸதிருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம். "ரஸவான்களுடைய பழக்கத்தாலும் பக்தி வழிகளை அனுசரிப்பதனாலும் ஒருவன் ரஸக்காட்சியை வருவித்துக் கொள்ளலாம். "ராகத் துவேஷங்களை ஜயிப்பதனால் ஒருவன் சித்தசமாதி யடைகிறான். அப்போது ஞானதிருஷ்டி யுண்டாகிறது.அந்த ஞானதிருஷ்டி யுடையவர்கள் புறப்பயிற்சியில்லாமலேசாஸ்திரங் களுக்குக் கண்ணாடிபோல் விளங்குவார்கள். "சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும்அபி நயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள்கலக்கலாகாது. ஆண் மகனே பெண்ணுருக்கொண்டுகூத்தாடுவானாயின், அப்போது பெண்மை அபிநயங்கள்காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாறாமல் கூத்தாடும்போது பெண்மை தோன்றலாகாது. "வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவானாயின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவைஅவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபாஸனையே கூத்தனுக்கு வீர ரஸத்தில் தேர்ச்சி கொடுக்கும். "பயாநக ரஸத்தை ஸபையிலே கூத்தன் அதிகமாகவிவரிக்கலாகாது. எந்த நாட்டிலே கூத்தர் பயாநகத்தையும்சோகத்தையும் அதிகமாகக் காட்டுகிறார்களோ, அந்த நாட்டில்பயமும் துயரமும் அதிகப்படும |