மிருகங்களை நாகரீகப் படுத்தும் வழி "ஸர்க்கஸ்" கம்பெனிகளிலே புலி, சிங்கம், யானை, கரடி முதலியவைகளைப் பூனைக்குட்டிகள் போலே பழக்கி வைத்துவிடுகிறார்கள். ?கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேல் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்? என்றுதாயுமானவரும் சொல்லியிருக்கிறார். மனுஷ்ய சரித்திரம்எழுதப்படத் தொடங்கிய காலத்திற்கு முன்னே, மனிதருக்கிடையே எழுத்துத் தொழில் பழக்கப்படத்தொடங்கிய காலத்திற்கும் வெகு காலத்திற்கு முன்னரே,மனிதர் மற்ற மிருகங்களுடன் போராடிப் போராடி,வென்று வென்று, தம் மேன்மையை நிலைநிறுத்திக்கொண்டு விட்டனர். காட்டில் மனிதன் கிழங்குகள்பறித்துண்ணப் போனவிடத்தில் தனியாகவும், மற்றமனிதருடனும், தனிப்பட்ட அல்லது கூட்டமாக வந்துநின்ற காட்டுப் "பன்றிகளுடன் போராடி அவற்றைச் சில சமயங்களில் வென்றும், சில சமயங்களில்அவற்றாலே கொல்லப்பட்டு மடிந்தும் வந்துகொண்டிருந்தான். கடைசியாகக் காட்டுப்பன்றிக் குலம்தோல்வியை அங்கீகரித்துக் கொண்டது. இங்ஙனமே,கணக்கற்ற, கணக்கற்ற, கணக்கற்ற துஷ்டமிருகங்களுடனும் பாம்புகளுடனும் போராடிப்போராடி, மண்ணுலகத்தின் மீது, மனிதனேஅரசனாகவும் மற்றைய ஐந்துக்களெல்லாம் இங்குவாழ்வதற்கு இயற்கை உரிமை இல்லாத (அதாவது,''மனிதக் கூட்டத்தார் இஷ்டப்பட்டு உயிர் தரித்திருக்கஇடங்கொடுத்தால் உயிர் வாழலாம்; இல்லாவிட்டால்ஜீவித்திருக்கும் பாத்யதை அவற்றுக்கில்லை''யென்றுமஹா நீசத் தண்டனை மனித ஜாதியால்விதிக்கப்பெற்ற) அடிமைக் குடிகளாகவும் ஏற்படும்நிலைமையுண்டாயிற்று. இவற்றுள்ளேமனிதனைக் கொல்லக்கூடிய வலிமை படைத்தனசில குலங்கள். மனிதனாற் கொல்லப்படத்தக்க மனிதனைக் காட்டிலும் பலம் குறைந்த ஐந்துக் குலங்கள் கணக்கற்றன.கணக்கற்றன, கணக்கற்றன, பல பல, பற்பல, பல பல, பல பல. இத்தனை ஜந்துக்களையும் மனிதன் தந்திரத்தால்அடிமைப்படுத்தி விட்டான். தீயின் பலத்தால் மனிதன்மிருகங்களை ஜயித்தான். கை பலத்தால் ஆட்டைக்கொன்றான். வில்லின் பலத்தால் புலியைக் கொன்றான்.தீயின் பலத்தால் யானையையும் சிங்கத்தையும் வென்றான்.முன்னொரு காலத்தில் சிங்கக் குலத்துக்கும் மனிதக்குலத்துக்கும் கொடிய போராட்டம் நிகழ்ந்தது. சிங்கக்குலம் தோற்றுவிட்டது. சிங்கத்தின் புஜபலத்தையும்வீரத் தன்மையையும் மனிதன் தீயின் சக்தியால் வென்றான்.இயற்கை தன் ரஹஸ்ய சக்திகளில் ஒன்றை மனிதனுடையதந்திரத்திற்கு வெளிப்படுத்திற்று. இத்தனை கோடி, கோடி,கோடி, மிருகங்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் சேர்ந்து,பூமண்டலத்தில் ஜீவலோகம் உற்பத்தியான கோடானுகோடி வருடங்களுக்கு முன்பு முதல் இன்றுவரை, தீ கண்டுபிடிக்கும் தந்திரம் தெரியாமற் போய்விட்டது. |